தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழில் இளம் தொழில் முயற்சியாளர் மன்றம் உருவாக்கம்

யாழ் மாவட்டத்தில் இளம் தொழில் முயற்சியாளர்கள் தமது தொழிற்துறை அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து செயற்படுவதை மையமாகக் கொண்டு செயற்படுவதை நோக்காகக் கொண்டு இளம் தொழில் முயற்சியாளர் மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப கட்ட முயற்சி வடமராட்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கியநாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினால் (யு.என்.டி.பி) செயற்படுத்தப்பட்டுவரும் இளம் தொழில் முயற்சியாளர்கள் அபிவிருத்திச் செயற்திட்டத்தில் உள்வாங்கப்பட்ட இளம் தொழில் முயற்சியாளர்களை ஒன்றிணைத்தே இவ் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அங்குரார்ப்பணக் கூட்டம் கடந்த 21.12.2015 திங்கட்கிழமை பி.ப 02.30 மணிக்கு கரவெட்டிப் பிரதேச செயலர் சிவஸ்ரீ தலமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் ஐக்கியநாடுகள் அபிவிருத்தித் திட்ட அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், செபே நெற் ஸ்ரீலங்கா அமைப்பின் அதிகாரிகள், கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் யாழ் மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஆகியோருடன் வடமராட்சிப் பிரதேசத்தின் 50 க்கு மேற்பட்ட இளம் தொழில் முயற்சியாளர்களும் கலந்து கொண்டனர். இவ்வாறான அமைப்பானது வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம், ஆகிய பிரிவுகளில் நிறுவப்பட்டு தனித்தனியாகச் செயற்படுவதுடன் இவை அனைத்தையும் ஒன்றிணைத்து “யாழ் மாவட்ட இளம் தொழில் முயற்சியாளர் சம்மேளனம்” உருவாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

work (1) work (2)

Comments
Loading...