Designed by Iniyas LTD
யாழில் உருவாகும் மிகப் பெரிய விகாரை!
யாழ். நாவற்குழி விகாராதிபதியை எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி சிறிநிதி நந்தசேகரம் பிறப்பித்துள்ளார்.
நாவற்குழி பகுதியில் உரிய அனுமதிகள் பெறாமல் நிர்மாணிக்கப்படும் விகாரையின் கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு சாவகச்சேரி பிரதேச சபையினால் நாவற்குழி விகாராதிபதி அம்பிலிப்பிட்டிய சுமணதேரருக்கு ஏற்கனவே அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் குறித்த விகாரையை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சாவகச்சேரி பிரதேச சபையினால் நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதற்கமைவாகவே நாவற்குழி விகாராதிபதி அம்பிலிப்பிட்டிய சுமணதேரருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
யாழ். நாவற்குழி பகுதியில் பலகோடி ரூபா செலவில் மிகப் பெரிய புத்த விகாரை ஒன்று அமைப்பதற்கான 523ஆவது படைப்பிரிவின் தளபதி அண்மையில் அடிக்கல்லினை நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.