Designed by Iniyas LTD
யாழில் கடைகடையாக சென்று நிவாரணம் சேகரிக்கும் ஸ்ரீ காவல்துறை!
யாழ்மாவட்ட பிரதிக் காவல்துறைமா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, யாழ். மாவட்டக் காவல்துறையினர் கடை கடையாகச் சென்று நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தென்மாகாணத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை தந்துதவுமாறு கோரி வருகின்றனர்.
அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் எதிர்வரும் 1ஆம் நாள்வரை யாழ்ப்பாணக் காவல்நிலையத்திலோ, யாழ் மாவட்ட பிரதிக் காவல்துறைமா அதிபரின் அலுவலகத்திலோ பொருட்களை வழங்கமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.