Designed by Iniyas LTD
யாழில் கைது செய்யப்பட்ட ஆவா குறுப்பிடமிருந்து இரண்டு கைக்குண்டுகள் மீட்பு

யாழில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட அவா குறுப்பிபிடமிருந்து இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் காவல்நிலையப் பொறுப்பதிகாரி சிறினிக ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை 2014-01-07 யாழ் கோப்பாய் காவல் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஆவா குறுப்பைப் சேர்ந்த 09 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 02 கைக்குண்டுகள் உட்பட 12 வால்கள் மற்றும் கம்பிகள்,நக்கில்ஸ் என்பன மீட்கப்பட்டுள்ளது.
யாழ்பாணத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 21 குறுப்பாக இணைந்து தென்னிந்திய சினிமாப் பாணியில் மோட்டார் சைக்கில்களின் சீற், மற்றும் ஜக்கற் போன்றவற்றிற்குள் வால்களையும் கைக்குண்டுகளையும் வைத்துக்கொண்டு மிரட்டல், கொலை, கொள்ளை, கப்பம் கோரல் போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த ஆவாகுறுப்புக்கு வினோதன் என்ற 21 வயது நபர் தலைமைதாங்கி வந்துள்ளதுடன் இவர்கள் நிற்கும் பகுதியில் பொதுமக்கள் சென்றால் அவர்களிற்கு மண்டியிட்டே செல்லவேண்டிய நிலைகாணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் ஆவாகுறுப் தலைவன் வினோதன் கைது செய்யப்பட்ட பின்னர் ஒருவருக்கு ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்டையில் யாழ்ப்பாணம், சாவகச்சேரி, சுன்னாகம் போன்ற பகுதிகளில் வைத்து இந்த ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசேட நடவடிக்கைக்காக 21 பேர் கொண்ட விசேட காவற்துறை அணி 03 அணியாக செயற்பட்டுள்ளதுடன் இந்த நடவடிக்கைக்கு வடமாகாண பிரதிக்காவற்துறை மா அதிபர் மற்றும் யாழ் மாவட்ட பிரதிக்காவற்துறை அதிபர் ஆகியோர் பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கண்ணாடி உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவற்துறையில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதால் இது தொடர்பாக துரித விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இவர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என்றும் பயங்கர குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதால் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் முற் படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்தோடு இந்த கைது நடவடிக்கை தொடர்பில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு தொலைபேசி அழைப்புக்கள் வந்தவண்ணம் உள்ளதாகவும் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவர்கள் தொடர்பில் பொதுமக்கள் தயக்கமின்றி காவல் நிலையங்களில் முறைப்பாடு தெரிவிக்கவேண்டும் அவ்வாறு முறைப்பாடு செய்ய அச்சமிருந்தால் தொலைபேசி மூலம் காவற்துறையினருக்கு தெரிவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இவர்களின் கைது மூலம் யாழில் குற்றச் செயல்கள் குறைவடையலாம் என்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.