தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழில் சுகாதாரத் தொண்டர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

downloadயாழ்ப்பாணம் – பண்ணையில் அமைந்துள்ள வடமாகாண சுகாதார அமைச்சின் முன்பாக வடமாகாணத்தைச் சேர்ந்த சமூக சுகாதார தொண்டர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் இன்று திங்கட்கிழமை காலை 8.30 முதல், சுகாதார அமைச்சின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
வட மாகாணசபைக்கு முன்பாக பல தடவையும் கடந்த வெள்ளிக்கிழமை ஆளுநர் அலுவலகம் முன்பாகவும் தாங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதும், தங்களுக்குரிய பதில் கிடைக்கவில்லை என கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் 450 க்கும் மேற்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வடமாகாண சுகாதார அமைச்சரின் முடிவு கிடைக்கும் வரை குறித்த இடத்தினை விட்டு செல்லமாட்டோம் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமூக சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments
Loading...