தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழில் தனக்குத் தானே தீமூட்டி எரித்துக்கொண்ட பெண் …


யாழ்ப்பாணம் வடமராட்சி, நவிண்டில் பகுதியில் தனது சகோதரியுடன் சண்டை பிடித்துக் கொண்டு
18 வயதான மாணவியொருவர் தனக்குதானே தீ வைத்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

உறவினர்கள் அவரை மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
அனுமதித்த நிலையில் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு குறித்த மாணவி அனுப்பி
வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மாணவியின் உடலில் 80 வீதமான எரிகாயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலைதகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நவிண்டில்- கொற்றாவத்தை பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மூவர் இவ்வாறு தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி எரிந்துள்ளமை கிராம மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Comments
Loading...