தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி

யாழ் மானிப்பாய் பகுதியில் வாள்களுடன் சென்ற கும்பல் ஒன்றினை காவல்துறையின‌ர் மறிக்க முற்பட்ட போது தப்பிசெல்ல முற்பட்ட வேளை காவல்துறையின‌ர் நடத்திய துப்பாக்கிசூட்டில் இளைஞன் ஒருவன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் பயணித்ததாகவும் சுற்றுக்காவில் ஈடுபட்டிருந்த காவல்துறையின‌ர் அவர்களை மறிக்க முற்பட்ட போதும் அவர்கள் நிறுத்தாத நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் காவல்துறையின‌ர் தெரிவிக்கின்றனர்.


Comments
Loading...