Designed by Iniyas LTD
யாழில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் ஆளுநர் முதல்வருக்கிடையில் முறுகல் நிலை உருவாகும்? இந்தியன் எக்ஸ்பிரஸ்
மாகாணத்தின் ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையில் முறுகல்நிலை தோன்றலாம் என இந்தியன்
எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி
சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளார்.
இதற்காக யாழ்ப்பாண செயலகத்தில் அலுவலகமொன்றையும் அமைக்கவுள்ளார்.
இந்த நடவடிக்கை ஆளுநருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில்
சர்ச்சையை தோற்றுவிக்கலாம் எனத் தெரிவித்துள்ள அரசியல் ஆய்வாளர்கள், தன்னிச்சையாக இந்த
மாநாட்டை ஏற்பாடுசெய்வதன் மூலம் ஆளுநர் முதலமைச்சரின் அதிகார வரம்புக்குள் ஊடுருவுகின்றார்
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த விடயம் தொடர்பில் முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்றும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
மத்தியரசு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட வடக்கு மாகாண சபையை மீறி பல நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் கருத்து தெரிவித்து வருவதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ்
செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய பதிவு
மத்திய அரசும் அதன் பிரதிநிதியான ஆளுநரும் செயற்பட்டுவரும் விதம் காரணமாக 13 ஆவது திருத்தம்
மூலம் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் பறிக்கப்படுவதாகவும் முதலமைச்சர் குறிப்பி ட்டு வருகின்றார்.
இதேவேளை, வடக்கு மாகாண முதலமைச்சர் சிறிய நடவடிக்கையை கூட முன்னெடுக்கவில்லை
எனவும் அரசு வழங்கிய நிதியைகூட பயன்படுத்தாமல் திருப்பியனுப்பிவிட்டார் என்ற குற்றச்சாட்டும்
மத்தியரசால் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மத்திய அரசும் வடமாகாணசபை மற்றும் அதன் முதலமைச்சருடனான செயற்பாடுகளில்
சரியான விதத்தில் நடந்து கொள்ளவில்லை. உள்ளுரில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைமைத்துவம்
மற்றும் ஸ்தாபனங்களை கலந்தாலோசிப்பது தொடர்பில் அவர்களை உள்வாங்குவது குறித்து மத்தியரசு
அக்கறை காண்பிக்கவில்லை.
யாழ்ப்பாணத்தில் முதலீடுசெய்ய விரும்புபவர்களை கையாள்வதற்கான அலுவலகம் யாழ்ப்பாண
செயலகத்தில் அமையவுள்ளது மாகாண அலுவலகங்கள் மத்திய அரசின் கீழ் வருவதனால் மத்தியின்
பிரதிநிதி என்ற வகையில் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். மாகாணசபை இந்த
அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியாது.
எனினும் முதலமைச்சரின் அனுமதியின்றி மாகாண அலுவலகங்களையும், அலுவலர்களையும்
பயன்படுத்துவது அரசியல் ரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை. நல்லிணக்கம் மற்றும்
அதிகாரப்பகிர்வுக்கு எதிரானது என்ற விமர்சனங்கள் எழலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
