Designed by Iniyas LTD
யாழில் நாளை மின்தடைப்படும் பகுதிகள் இதோ
யாழில் நாளை மின்தடைப்படும் பகுதிகள் இதோ….
மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை புதன்கிழமை(19) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்படுமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, யாழ். மண்டைதீவு, மண்டைதீவு கடற்படை முகாம், மண்கும்பான், மண்கும்பான் விடுதி, மண்கும்பான் கடற்படை முகாம், தேசிய நீர் வழங்கல் வடிகால் சபை, அல்லைப்பிட்டி, வெண்புரவிநகர், பூம்புகார் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.