தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழில் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம். – பெண்கள் இருவர் கைது..

யாழ்  வடமராட்சி துன்னாலைப் பகுதியில் இன்று காலை , வீடு ஒன்றில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால்  முற்றுகையிடப்பட்டுள்ளது..

அங்கு மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் அங்கு  இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது..

இந்நிலையில் ஆண் ஒருவர் தப்பியோடியுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த வீட்டில் இருந்து  115 லீற்றர் கோடா, 10 லீற்றர் கசிப்பு மற்றும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில்  நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...