Designed by Iniyas LTD
யாழில் பொலிஸாரின் மிருகத்தனமான செயல் – இளைஞன் வைத்திய சாலையில் அனுமதி.
யாழில் கொக்குவிலில் இளைஞர் ஒருவரை மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டு, அவரை சப்பாத்துக் கால்களால் உதைந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் அடாவடித்தனத்துக்கு எதிராக மக்கள் கொதிப்படைந்த்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் கொக்குவில் பொற்பதி வீதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கோப்பாய் பொலிஸ் உத்தியொகத்தர்களே இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இளைஞர் ஒருவரும் மாணவர் ஒருவரும் மோட்டார் சைக்கிளில் கொக்குவில் பொற்பதி வீதியில் பயணித்தபோது, அவர்களைப் பொலிஸார் மோட்டார் சைக்கிளைக் குறுக்கேவிட்டு மறித்ததனால், நிலைகுலைந்த இளைஞர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இந்த நிலையில் கால் முறிந்து தசைகள் தொங்கிப் படுகாயமடைந்து வீதியில் கிடந்த இளைஞரை பொலிஸார் இருவர் சப்பாத்துக் கால்களால் தாக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஏனைய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இளைஞருடன் சென்ற மாணவரை அழைத்துச் சென்று தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதனைக் கண்ட ஊர் இளைஞர்கள், படுகாயமடைந்த இளைஞரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர்.
கொக்குவில் பொற்பதி வீதியைச் சேர்ந்த ஏ.டெனிஸ்ரன் (வயது – 18) என்ற இளைஞனே வலது கால் முறிந்து தசைகள் கிளிந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை கோண்டாவில் இராமகிருஷ்ணா மகா வித்தியால தரம் 11இல் பயிலும் சுஜீவன் என்ற மாணவனையே பொலிஸார் தாக்கிவிட்டு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.