தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழில் மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் தப்பி ஓட்டம்..

யாழ். நாவாந்துறைப் பகுதியில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச்  அனுமதிக்கபப்ட்டிருந்த நிலையில் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக   வைத்தியசாலைப் பணி ப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்ட போதும் அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படாமல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

யாழ். நாவாந்துறை சந்தைப் பகுதியில் நேற்று  முற்பகல் ஒருவர்  12 வயதுச் சிறுமியைக் கடத்திச் செல்ல முற்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, நாவாந்துறை சந்தைப் பகுதியில் கூடியிருந்தவர்கள் அந்த நபரைப் பிடித்து கட்டிவைத்து நையப்புடைத்ததுடன், யாழ் பொலிஸாரிடம் அவரை ஒப்படைத்திருந்தனர்.

இதனையடுத்து, சந்தேகநபரைக் கைது செய்த பொலிஸார், அவரை அழைத்துச் சென்று யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்ட  நிலையில் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக  தெரியவ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...