Designed by Iniyas LTD
யாழில் மூவர் மீது வாள்வெட்டு!
நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத 12 பேர் வாளால் சரமாரியாக வெட்டியதில் மூவர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 7.50 மணியளவில் புன்னாலைக்கட்டுவன் ராஜயர் கோவிலுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
இதில் குப்பிளான் தெற்கு புன்னாலைக்கட்டுவனை சேர்ந்த குடும்பஸ்தரான கந்தவனம் வசீகரன் (வயது 50) மற்றும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்களான விஜயகுமார் அனோஜன் (வயது 26) மகாலிங்கம் சார்ள்ஸ் அன்ரனி (வயது 24) ஆகியோரே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
வாள்வெட்டில் ஈடுபட்டவர்கள் தலைக்கவ சத்தால் முகத்தினை மூடியவாறே வாள்வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸில் முறையிட்டதனை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.