Designed by Iniyas LTD
யாழில் வெட்டிக்கொலை செய்யப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார்!
கடந்த 16ஆம் திகதி கல்லுண்டாய் வெளிப்பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபரினை அவரின் மனைவி நேற்று அடையாளம் காட்டியுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
நெல்லியடி துன்னாலை பகுதியினை சேர்ந்த நடராஜா சந்திரதாசன் என்ற நபரே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்கானவராவார்.மேற்படி நபர் ஏன் கல்லுண்டாய் பகுதிக்கு வந்தார் அல்லது வேறுயாராவது அழைத்து வந்தார்களா? என்பது தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் உயிரிழந்தவரின் மனைவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது