Designed by Iniyas LTD
யாழில் 217 மது விற்பனை நிலையங்கள்?
யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாழும் 6 லட்சம் மக்களின் கல்வி நிலைக்கு 448 பாடசாலைகள் உள்ளபோது மது விற்பனை நிலையங்கள் 217 உள்ளதாக கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
யாழ்.குடாநாட்டில் கல்வி வலயம் 5 உள்ளதுபோல் மது வரித்தணைக்களத்தின் பிரிவுகளும் 5 உள்ளது. குடாநாட்டின் மொத்த கல்விக்காக 448 பாடசாலைகள் உள்ளதாக கல்வித் திணைக்களத் தகவல் கூறுகின்றன.
இதேபோல் குடாநாடு முழுமையாக வாசிப்பு பழக்கத்திற்காக உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் 55 நூலகங்களும் ஏனைய நூலகங்கள் 7ம் உள்ளது. இதேவேளை ஒட்டுமொத்த மக்களினது வைத்திய சேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக போதனா வைத்தியசாலை உட்பட 45 வைத்தியசாலைகள் உள்ளது.
தொடர்புடைய பதிவு
இவ்வாறு அத்தியாவசியமான பல விடயங்களின் எண்ணிக்கையை தாண்டி பாடசாலையின் எண்ணிக்கையின் அரைமடங்கு எண்ணிக்கையை தொட்டுவிட்ட மது விற்பனை மையங்களை குறைப்பதற்கு குடாநாட்டின் மூத்த புத்திஜூவிகள் உடன் முன்வர வேண்டும் என பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.
குடாநாட்டில் மொத்தம் உள்ள 217 மது விற்பனை நிலையங்களில் 47 மதுபான விற்பனை நிலையங்களும் , 22 ரெஸ்ரூரன்ட் களும் , 148 கள்ளுத் தவறனைகளும் உள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இவற்றினை விட மது வரித் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத இராணுவத்தினரால் நடாத்தப்படுகின்ற உல்லாச விடுதிகள் ( தல்செவன போன்றவை ) ஆறு உள்ளதுடன் இரகசியமான முறையில் வீடுகளில் கள் விற்பனை மற்றும் கள்ளச் சாராய விற்பனையும் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.