தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ்,நல்லூரில் அதிரடி தேடுதல் நடவடிக்கை…

யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆலயத்தை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆலய சுற்று வீதிகளின் போக்குவரத்து தடை செய்யப்பட்டும், அங்கு அதிகளவான இராணுவம், விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதோடு பக்தர்கள் உடற் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவதால் பக்தர்கள் மத்தியில் அச்சமான மனநிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வடமாகாண ஆளுநருக்கு முகவரியிடப்பட்டு அநாமதேய கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது.

அதில் நல்லூர் ஆலயத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த உள்ளதாக எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது.

குறித்த அநாமதேய கடிதம் தொடர்பில் ஆளுநர் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து குறித்த பாதுகாப்பு கெடுபிடிகள் நல்லூர் ஆலய வளாகத்திலும், அதனை சூழவுள்ள பகுதிகளிலும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...