Designed by Iniyas LTD
யாழ்ப்பாணத்தில் சிறையிலிருக்கும் தந்தையினை விடுவிக்க கோரி சிறுவர்கள் பேரணி
இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி அவர்களின் பிள்ளைகள் யாழ்பாணத்தில், பேரணியாகச் சென்றனர்.
யாழ் மாவட்டச் செயலகம் முன் தொடங்கிய இந்த பேரணி, அவனியூர் பகுதியில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சர் அலுவலகம் வரை சென்றது.
இதில், அரசியல் கைதிகளின் பிள்ளைகளுடனும், அவர்களது உறவினர்களும் கலந்துகொண்டனர். பின்னர், முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்து, தங்களின் கோரிக்கை அடங்கிய மனுவினை குழந்தைகள் அளித்தனர்.
மேலும், அந்த மனுவினை, அதிபர் மைத்ரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.