தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு தாக்குதல்! மூவர் படுகாயம்!

யாழ். சாவகச்சேரி, கனகம்புளியடி சந்தியில் உள்ள உணவகம் ஒன்றில் மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட குழுவினர் நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று மாலை 4 மணிக்கு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட குழுவினர் இந்த தாக்குதலை நடத்தியதாக சாவகச்சேரி பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் அகப்படாமல் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தில் உணவகத்தின் உரிமையாளரான 32 வயதுடைய சிவபாலன் சிவலக்ஷ்மன்,

முச்சக்கர வண்டி சாரதியான 24 வயதுடைய நாகசாமிநந்தன், வெளிநாடொன்றிலிருந்து இரண்டு தினங்களுக்கு முன்னர் நாடு திரும்பிய 22 வயதுடைய வேணுகோபால் சுகந்தன் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Comments
Loading...