தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ்ப்பாணம், பளை பகுதியில் ஐவர் கைது..

யாழ்ப்பாணம், பளை பகுதியில் வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை திடீர் சுற்றிவளைப்பில் ஈட்டுபட்ட பளை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் குறித்த நபர்களை கைதுசெய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

கடந்த மாதம் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களை அடுத்து நாடளாவிய ரீதியில் திடீர் சுற்றிவளைப்புக்களை முப்படையினர் முன்னெடுத்துள்ளதோடு,

வெடிபொருட்களையும் அவர்கள் கைப்பற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...