Designed by Iniyas LTD
யாழ்வந்த ரணிலிடம் தமிழ் மக்களின் பிரச்சனையை பேச மறந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்ததை ஊடங்கள் வெளியிட்டுள்ளன.அவரது விஜயத்தின் முக்கிய விடயமாக யாழ் மாவட்ட செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் உள்ளடங்கியவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தார்.
இதன் போது அதில் கலந்துகொண்டிருந்த யாழ் மாவட்ட தேர்தல் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வீதி அபிவிருத்தி வனவளத்திணைக்களத்தின் காணி ஆக்கிரமிப்பு நடவடிக்கை பற்றியே பேசியிருந்தனர்.மாறான வடக்கு மக்களின் வாழ்வியலில் நீண்ட காலமாக தீர்வற்ற பிரச்சனைகளாக தொடரும் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்படுள்ள காணிகள் காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம் சிறைக்கைதிகள் விடுதலை ஆக்கிரமிக்கும் நோக்கில் நிறுவப்பட்ட புத்தர் சிலைகள் யாழ்ப்பாணத்தில் சீர்குலைக்கப்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு பற்றி கேள்விகளை அக்கூட்டத்தில் கேள்வி எழுப்பி அரசாங்கத்தின் பிரதம அமைச்சரான ரணிலிடம் எந்தவித உறுதி மொழிகளையும் பெற்றுக்கொள்ள முயலவில்லை.
யாழ் மாவட்டத்தில் அன்றாடம் கொள்ளை வாள்வெட்டு கொலைகள் வரையில் சமுகச்சீரழிவுகள் நடைபெறுகின்றன.இதற்கு சட்டம் ஒழுங்கால் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை.கஞ்சா போதை பொருட்கள் அன்றாடம் பிடிபடுகின்றன இவை எவ்வாறு யாழ்ப்பாணத்துள் கொண்டு வரப்படுகின்றன அதற்கு உடந்தையாக இருக்கின்ற விடயங்கள் தொடர்பில் இறுக்கமான குரல்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எழுப்பவில்லை.
ஒரு தொகுதி பெண்கள் குடும்பங்களை தலைமைத்துவம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அரசியல் கைதிகள் இன்னமும் விடுவிக்கப்படாமையால் தொடர்கின்றது.காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணப்படாமையால் தொடர்கின்றது.இத்தகைய நீண்ட வலிகள் நிரம்பிய பிரச்சனைக்கு ரணில் விக்கிரமசிங்கவிடம் தீர்வை பெறமுடியவில்லை எனில் வெறும் அபிவிருத்திக்காக மட்டுமா ரணிலுக்கு ஆதரவை தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்கி வருகின்றது என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாக நேற்றைய ரணில் நடத்திய கூட்டத்தை வைத்துப்பார்க்கும் போது வெளிப்படுகின்றது.நெடுந்தீவு என்ற தமிழர்களின் தீவு காலம்காலமாக கடற்படையின் ஆக்கிரமிப்பிலேயே இருப்பதை வெளிப்படுத்தாது நெடுந்தீவில் வீதி போடுவதை பற்றி பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.



