JaffnaHinduCollegeயாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களால் முன்னெடுக்கப்படும் வடக்கு  , கிழக்கு மற்றும் மலையகப் பகுதி மாணவர்களின் கணிதபாட அடைவு மட்டத்தினை அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளும் செயல்திட்டத்தின் விழிப்புனர்வு நடைபவனி நேற்றைய தினம் உலகின் நான்கு இடங்களில் இடம்பெற்றது.

இந்து 92ம் ஆண்டு லண்டன் பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்பில் மேற்கொள்ளும் குறித்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வடக்கு , கிழக்கு மற்றும் மலையப் பகுதிகளில் வாழும் தமிழ் மொழி மூலம் மாணவர்களின் கணிதபாட அடைவு மட்டத்தினை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 2013 ம் ஆண்டிலிருந்து குறித்த பணி முண்னெடுக்கப்படுகின்றது.

இதற்கான விழிப்புணர்வு நடைபவனி யாழில் நேற்றைய தினம் காலை 8 மணிக்கு கல்லூரி முன்றலில் இருந்து ஆரம்பமாகி 9.30ற்கு மீண்டும் கல்லூரியை அடைந்தது.

இவ் நடை பவணியில் கல்லூரியின் அதிபர் மாணவர்கள் பழைய மாணவர்களுடன் பழைய மாணவர்கள் சார்பில் ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் மற்றும் மாவட்ட அதிகாரி சார்பில் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை புலம்பெயர் நாடுகளில் லண்டன் , கனடா , ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளிலும் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.