தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் உடுத்துறை துயிலுமில்லத்தில் எழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்நாள் நிகழ்வு!

யாழ். வடமராட்சி கிழக்குப்பகுதியில் உள்ள உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, பொதுச் சுடர் ஏற்றப்பட்டு விதைக்கப்பட்டுள்ள வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் எழுச்சி கீதங்கள் இசைக்கவிடப்பட்டுள்ளதுடன், மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் என அனைவரும் கண்ணீருடன் அஞ்சலி செலுத்துவதை காணக்கூடியதாக இருந்தது.

Comments
Loading...