Designed by Iniyas LTD
யாழ் கைதடியில் வாள்வெட்டு குழு அட்டகாசம் – ஐவர் படுகாயம்..
கைதடிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து கும்பல் ஒன்று மேற்கொண்ட தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏ-9 நெடுஞ்சாலையிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த 15 இற்கும் மேற்பட்ட நபர்கள், பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டும் கூரிய ஆயுதங்களால் வீட்டிலுள்ளவர்களைத் தாக்கியும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாக்குதலை நடத்தியவர்கள் முகத்தை துணியால் மூடி கட்டியிருந்ததாக முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை உறவினர்களுக்கு இடையேயான தகராறு காரணமாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.