தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ்.கோட்டைக்குள் இராணுவம் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது – வடமாகாண ஆளுநர்..

நாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்ற போதைப் பொருட்களை கட்டுப்படுத்த   யாழ்.கோட்டைக்குள் இராணுவம் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுநரின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது, அவர் இதனை ஊறியுள்ள்ளார்.

“யாழ். குடாநாட்டினூடாகவே இலங்கைக்குள் அதிகளவான போதைப்பொருள் கடத்தல்கள் இடம்பெறுகின்றதாகவும் . அவை தவிர குடாநாட்டில்  பல்வேறு இடங்களில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவற்றை கட்டுப்படுத்த வேண்டுமானால் இராணுவம் கோட்டைக்குள் இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்..

மேலும் போதை பொருட்கள்  10 வீதம் விமானம் மூலமும், 10வீதம் துறைமுகங்கள் ஊடாகவுமே நாட்டுக்குள் வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

மேலும்  குடாநாட்டினூடாகவே இலங்கைக்குள் அதிகளவான போதைவஸ்த்து கடத்தல்கள் இடம்பெறுவதாக” அவர் இதன்போது  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Comments
Loading...