Designed by Iniyas LTD
யாழ்-சாவகச்சேரியில் கிணற்றில் வீழ்ந்து மாணவன் பலி!
யாழ்ப்பாணம், சாவகச்சேரி கல்வயல் பகுதியில் மாணவன் ஒருவர் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவன் பட்டம் ஏற்றிக்கொண்டு பின்பக்கமாக ஓடிய போது கிணற்றில் தவறி வீழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த ஜெயகுமாரன் தீசன் (வயது 16) எனும் மாணவனே உயிரிழந்துள்ளார்.
குறித்த சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.