தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் சாவகச்சேரியில் பட்டப்பகலில்   துணிகரக்கொள்ளை…

யாழ் சாவகச்சேரி  ஏ-9 பிரதான வீதியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் இன்றுகாலை கத்திமுனையில் பெருந்தொகை பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இன்று காலை குறித்த நிறுவனத்தில்  8.30 மணிக்கு சுமார் 18 லட்சத்து 91 ஆயிரத்து 21 ரூபா பணம் கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இன்று காலை வழமைபோல நிதி நிறுவனத்தை திறந்த பணியாளர்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த பணத்தினை வங்கியில் வைப்பிலிடுவதற்காக எடுத்துள்ளனர்.
இதன்போது கத்தியோடு உள்நுழைந்த திருடன் அங்கிருந்தோரை அச்சுறுத்தி பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் உடனடியாக சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவிகப்பட்டுள்ளது..
Comments
Loading...