தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் சிறீலங்கா காவல் நிலையத்தில் அனந்தி சசிதரனுக்கு எதிராக முறைப்பாடு

download (4)

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு எதிராக யாழ் சிறீலங்கா காவல் நிலையத்தில் இன்று முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளதாக யாழ் சிறீலங்கா காவல் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் அம்மன் வீதி மற்றும் அரியாலை ஆனந்தன் கடை வீதி ஆகிய இரண்டு இடங்களிலும் மாநகர சபையின் அனுமதியில்லாமல் இயங்கி வந்த விடுதிகள் நேற்று சுற்றிவளைக்கப்பட்டது.

அனந்தி சசிதரனின் வேண்டுகோளுக்கிணங்க சிறீலங்கா காவல் துறையினர் மற்றும் மாநகர சபையினர் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். இதன் போது அங்கிருந்த எட்டுப் பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இந்நிலையில் அம்மன் வீதியில் இயங்கிய மசாஜ் நிலையத்திற்குள் அனந்தி தலைமையிலான குழுவினர் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி உரிமையாளர் சிறீலங்கா காவல் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளாதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Comments
Loading...