Designed by Iniyas LTD
யாழ் சுன்னாகத்தில் பெற்றோல்குண்டு தாக்குதல்…
யாழ். சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள உடற்பயிற்சி நிலையத்தில் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
சுன்னாகம் பொலிஸ் நிலையம் அமைக்கப்பவிருந்த வீட்டு வளாகத்துக்குள் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் புகுந்து அங்கிருந்த உடற்பயிற்சி நிலையத்தை சேதப்படுத்தியதோடு, பெற்றோல் குண்டுகளை வீசியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுன்னாகம் பொலிஸ் நிலையகாணி மீளப்பஎறப்பட்டதை அடுத்து , சுன்னாகம் கே.கே.எஸ் வீதியில் ஜக் மோட்டோர்ஸ் என்ற இடத்தில் மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.
குறித்த காணியில் தற்போது இயங்கிவந்த உடற்பயிற்சி நிலையம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆவா குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, அந்த இடத்தில் பொலிஸ் நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு தரப்பினர் நேற்றையதினம் கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இத காரணமாக சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
