Designed by Iniyas LTD
யாழ் சுழிபுரத்தில் கிணற்றில் இருந்து சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் 6 வயதான பாடசாலை இறுகி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
காட்டுப்புலம் அரசினர் தமிழ்க் கலைவன் பாடசாலையில் கல்வி கற்கும் தரம் ஒன்று மாணவி சிவநேஸ்வரன் றெஜினா (வயது-06) கொலை செய்யப்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தாயும் தந்தையும் வேலையின் நிமித்த வெளியே சென்றிருந்த நிலையில் சிறுமி காணாமல் போயுள்ளார்.
குறித்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது..