தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் மோடி உரையாற்றுவாராம்

யாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்குத் திறப்புவிழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி காணொளிமூலம் உரையாற்றவுள்ளார்.watermarked

இந்த விளையாட்டரங்கை சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியும் இணைந்து திறந்துவைக்கவுள்ளனர் என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த நேரத்தில் இந்தியப் பிரதமர் இந்தியாவிலிருந்தும் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் உரையாற்றவுள்ளனர். இந்திய அரசாங்கம் வழங்கிய 145 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் ஸ்ரீலங்காவின் தனியார் நிறுவனமொன்று கடந்த இரண்டு ஆண்டுகளாக துரையப்பா விளையாட்டரங்கின் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டிருந்தது.

துரையப்பா விளையாட்டரங்கில் முதலாம், இரண்டாம் நிலை பார்வையாளர் மண்டபங்களைத் தவிர புதிதாக உடற்பயிற்சி நிலையமொன்றும் கட்டப்பட்டுள்ளது. இந்த விளையாட்டரங்கு திறக்கப்பட்டதன்பினனர் இதனால் 50 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...