தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் தேசிய பொங்கல் விழாவில் பிரித்தானிய அமைச்சரும் பங்கேற்கவுள்ளார்!

showImageInStoryயாழ்ப்­பா­ணத்தில் நாளை நடை­பெ­ற­வுள்ள தேசிய பொங்கல் விழாவில் ஸ்ரீலங்கா  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ருடன் பிரித்­தா­னிய வெளி­யு­றவு அமைச்சர் ஹியூகோ ஸ்வையரும் கலந்து கொள்­கிறார். இதற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

யாழ்ப்­பாணம் வலி­காமம் வடக்கில் பலாலி இராஜ ராஜேஸ்­வரி அம்மன் ஆல­யத்தில் விசேட பொங்­கலும், பூஜையும் இடம்­பெ­று­கி­றது. இந்த நிகழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, பிரித்­தா­னிய வெளி­யு­றவு அமைச்சர் ஹியுகோ ஸ்வையர் முன்னார் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க, உட்­பட பலரும் கலந்து கொள்­ள­வுள்­ளனர். நாளை காலை 10.30 மணி­ய­ளவில் ஆல­யத்தில் இந்த விசேட நிகழ்வு இடம்­பெ­ற­வுள்­ளது.

இதனைத் தொடர்ந்து யாழ்ப்­பாணம் வீர­சிங்கம் மண்­ட­பத்தில் தேசிய பொங்கல் விழா நிகழ்வு இடம்­பெ­ற­வுள்­ளது. இந்­நி­கழ்வில் இலங்­கைக்­கான அமெ­ரிக்கத் தூதுவர் அப்துல் கேசாப், பிரித்­தா­னிய தூதுவர் ஜேம்ஸ் டோனிஸ், ஆகி­யோரும் பங்­கேற்­க­வுள்­ளனர். இந்த நிகழ்வில் சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் வர­வேற்­புரை ஆற்­ற­வுள்ளார். இந்து கலா­சார அமைச்சர் டி.எம். சுவா­மி­நாதன், பிரித்­தா­னிய வெளி­வி­வ­கார அமைச்சர் ஹியுகோ ஸ்வையர் , பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகியோர் விசேட உரை­யாற்­ற­வுள்­ளனர்.

கலை­நி­கழ்­வு­களும் இடம்­பெ­ற­வுள்­ளது. தைப்­பொங்கல் விழாவில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன், தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் செய­லா­ளரும், எம்.பி.யுமான மாவை சேனா­தி­ராஜா உட்­பட கூட்­ட­மைப்பு எம்.பி.க்களும் பங்­கேற்­க­வுள்­ளனர். இதற்­கான அழைப்­புக்­களும் அவர்­க­ளுக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

தேசிய பொங்கல் விழாவில் ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகி­யோ­ருடன் வெளி­நா­டொன்றில் வெளி­வி­வ­கார அமைச்சர் பங்­கேற்­பது இதுவே முதற்­த­ட­வை­யாகும்.

தேசிய பொங்கல் விழாவை முன்­னிட்டு பலாலி இராஜ ராஜேஸ்­வரி அம்மன் ஆல­யத்தை சூழ­வுள்ள பகு­திகள் படை­யி­னரால் துப்­ப­ரவு செய்­யப்­பட்­டுள்­ளது. கடந்த ஒரு வார கால­மாக இந்­தப்­ப­ணியில் இரா­ணு­வத்­தினர் ஈடு­பட்­டி­ருந்­தனர். நாளை­காலை பலாலி விமான நிலை­யத்தை சென்­ற­டையும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன , பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் தலை­மையில் பலாலி இராணுவத் தலைமையகத்தில் விசேட கூட்டமொன்றும் இடம்பெறவுள்ளது. மக்களின் மீள்குடியேற்றம், காணிகளை மீளக்கையளித்தல், தொடர்பான விடயங்கள் குறித்து முப்படைத் தளபதிகளுடன் இந்தக் கூட்டத்தில் ஆராயப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Comments
Loading...