தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் தேர்தல் தொகுதியில் வாக்களிக்க தகுதி உள்ளோர்…!!!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இம்முறை 5 லட்சத்து 71 ஆயிரத்து 848 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் தெரிவித்தார்.

மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வாக்காளர்கள் அனைவரும் வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி வாக்களிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் கடந்த வருடம் 5 லட்சத்து 64 ஆயிரத்து 714 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

இந்நிலையில் இம்முறை 5 லட்சத்து 71 ஆயிரத்து 848 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் எமக்கு கிடைக்கப் பெற்று உள்ளன. அவை தபால் திணைக்களத்தின் ஊடாக வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளன.

வாக்காளர்கள் சுகாதார முறைகளைப் பின்பற்றி அழைப்பினை மேற்கொள்ள முடியும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கு வாக்கு கேட்டுச் செல்லும் போது சுகாதார முறைகளை பின்பற்ற வேண்டியது கட்டாயமானது

Comments
Loading...