Designed by Iniyas LTD
யாழ்.தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!
யாழில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக, கடந்த வியாழக்கிழமை மாணவர்களினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அப்போது பொலிஸார் மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட்டனர்.
அச்சம்பவத்தைக் கண்டித்தும் அம்மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் யாழ். கடற்கரை வீதி பாசையுர் பகுதியில் அமைந்துள்ள உயர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புக்களை புறக்கணித்துக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
