Designed by Iniyas LTD
யாழ். நாவாந்துறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 42 கிலோகிராம் கஞ்சா மீட்பு…
யாழ். நாவாந்துறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 42 கிலோகிராம் கஞ்சா கொழும்பில் இருந்து சென்ற விசேட பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் குறித்த கஞ்சா மீடகப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.