Designed by Iniyas LTD
யாழ் நெல்லியடியில் விபத்தில் ஒருவர் பலி
வடமராட்சி நெல்லியடியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த ஊர்தியொன்று இன்று காலை 9.30 மணியளவில் நெல்லியடி கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக வீதியை கடக்க முயன்ற நெல்லியடி வதிரியைச் சேர்ந்த பொன்னம்பலம் தங்கராசா ராசாகோபன்(65) என்பவரை மோதியதில் அவர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து குறித்த வாகனச் சாரதி வாகனத்தினை அவ்விடத்திலேயே விட்டு விட்டு தப்பியோடியுள்ளார். விபத்துக்குள்ளானவரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நெல்லியடி போக்குவரத்து சிறீலங்காப் பொலிஸார் தெரிவித்தனர்.