தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் நோக்கி பயணித்த அரச பேருந்தும் முச்சக்கரவண்டியும் விபத்துகுள்ளாகியுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த அரச பேருந்தும்  பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து  வவுனியா A9 வீதி புதூர் சந்திக்கு அருகில்  இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் அதில்  பயணித்த பாடசாலை மாணவர்களும் படுகாயமடைந்த நிலையில் புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் ஓர் மாணவி ஆகியோர் கவலைக்கிடமான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த  பேருந்தும் முச்சகரவண்டியும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்ட போதே விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவன்ம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக ஏலும் தேரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...