தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் பல்கலைகழக மாணவன் படையினரால் சுற்றி வளைப்பு

யாழ்.பல்கலைக்கழக ஊடக கற்கை பீடத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் புலனாய்வாளர்களால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தில் ஊடக கற்கை பீடத்தில் கல்விபயிலும் மூன்றாம் ஆண்டு மாணவனான அ.நிவாஸ் என்பவரே காணாமல் போயிருப்பதாக தெரியவருகிறது. நீர்வேலியில் உள்ள அவருடைய வீட்டிற்கு நேற்றிரவு 7 மணியளவில் புலனாய்வாளர்கள் சென்று சுற்றிவளைத்திருக்கின்றனர். நிலைமையை உணர்ந்த குறித்த மாணவன் அவர்களிடம் இருந்து தப்பி ஓடியுள்ளார்.missing

அதன் பின்னர் வீட்டிற்குள் நுழைந்த புலனாய்வாளர்கள் வீட்டிலிருந்தவர்களிடம் நிவாஸ் தொடர்பில் தீவிரமாக விசாரணை நடத்தியிருக்கின்றனர். சம்பவத்தினை அடுத்து புலனாய்வாளர்கள் வீட்டைவிட்டு வெளியேறிய போதிலும் இதுவரையில் நிவாஸின் தொடர்பு வீட்டாருக்கு கிடைக்கவில்லை என்று தெரியவருகிறது. அவருடைய தொலைபேசியும் செயற்பாட்டில் இல்லை என்றும் அவருடைய உறவுகள் கவலை வெளியிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments
Loading...