தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ்-புன்னாலையில் ஸ்ரீ இராணுவ வாகனம் மோதி இளைஞன் படுகாயம்!

HHHHHHHHமோட்­டார் சைக்­கி­ளில் சென்ற இளை­ஞனை அவ­ரின் பின்­னால் சென்ற இரா­ணு­வ கப் ரக வாக­னம் மோதி­ய­தில் அவ­ரது கால் முறிந்­தது. முறிந்த எலும்­பின் ஒரு பகுதி வீதி­யில் காணப்­பட்ட நிலை­யில், இளை­ஞன் உட­ன­டி­யாக வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டார்.
இந்­தச் சம்­ப­வம் புன்­னா­லைக் கட்­டு­வ­னில் நேற்­றுக் காலை இடம்­பெற்­றது. புன்­னா­லைக்­கட்­டு­வன் தெற்­கைச் சேர்ந்த நாக­ராசா- பயூ­ர­தன் (வயது -19) என்­ப­வரே விபத்­தில் படு­கா­ய­ம­டைந்­தார்.
குறித்த விபத்து தொடர்­பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,
யாழ்ப்­பா­ணம் பலாலி வீதி­யில் உரும்­பி­ராய் திசை­யில் இருந்து பலாலி நோக்கி குறித்த இளை­ஞன் மோட்­டார் சைக்­கி­ளில் பய­ணித்­துள்­ளார். அதே­போன்று பலாலி நோக்கி இரா­ணுவ கப் ரக  வாக­னம் பய­ணித்­துள்­ளது. இதன்­போது மோட்­டார் சைக்­கி­ளில் பய­ணித்த இளை­ஞர் வீதி­யின் எதிர்ப்­பக்­கம் திரும்­பி­ய­வேளை இரா­ணுவ வாக­னம் மோட்­டார் சைக்­கிளை மோதித் தள்ளி இழுத்­துச் சென்­றுள்­ளது.
இத­னால் மோட்­டார் சைக்­கி­ளில் பய­ணித்த இளை­ஞ­னின் வலது கால் முழு­மை­யாக முறிந்­த­தோடு கையி­லும் பலத்த காயம் ஏற்­பட்­டது. முறித்த கால் எலும்பு வீதி­யில் கிடந்­தது. இத­னால் காய­ம­டைந்த இளை­ஞன் உட­ன­டி­யாக வீதி­யால் பய­ணித்த முச்­சக்­கர வண்­டி­யின் உத­வி­யு­டன் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டார்.
விபத்து தொடர்­பில் சுன்­னா­கம் ஸ்ரீ பொலி­ஸா­ருக்கு தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து சம்­பவ இடத்­துக்­குச் சென்ற பொலிஸார் மேல­திக விசா­ர­ணை­யில் ஈடு­பட்­ட­னர். பின்­னர் விபத்­தில் சிக்­கிய வாக­னங்­க­ளைப் பொலி­ஸார் கொண்டு சென்­ற­தோடு, இரா­ணுவ வாக­னச் சார­தி­யை­யும் அழைத்­துச் சென்­ற­னர்.
Comments
Loading...