Designed by Iniyas LTD
யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது
யாழ். போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிகால் பெரேரா தெரிவித்தார்.
யாழ். பொலிஸ் நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை 2014-01-31 இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமையாற்றுகின்ற ஊழியர் ஒருவர் கஞ்சா பொதி வைத்திருந்த சம்பவம் தொடர்பில் குறித்த ஊழியர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து நாளை 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, சுமார் ஒரு மாத காலமாக யாழ். போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கஞ்சா பாவனையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் கடந்த 22 ஆம் திகதி புதன்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட போதும் உரிய நடவடிக்கை இன்றி அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இச் சம்பவம் தொடர்பில் பலர் சுட்டிக்காட்டியதையடுத்து மீண்டும் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.