தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ். மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகத்திலும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறலாம்!

vethanayagamவட மாகாணத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ளவர்களும் வட மாகாணத்திலுள்ள  எந்தவொரு பிரதேச செயலகத்திலும் பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களை  பெற்றுக் கொள்ள முடியும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர். வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கணினியின் உபயோகத்துடன் பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழினை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய அனைத்து மாவட்டங்களிற்கும் உரிய கணினிமயப்படுத்தப்பட்ட பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களின் பிரதிகள் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களிலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களின் மூலமும்  வழங்குவதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது

அதற்கிணங்க வடமாகாணத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ளவர்களும் பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களின் பிரதிகளை யாழ். மாவட்டத்தின் எந்தவொரு பிரதேச செயலகத்திலும் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Comments
Loading...