தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ்.மாவட்ட இளையோருக்கான கூடைப்பந்தாட்ட போட்டிகள்.

யாழ். மாவட்டக் கூடைப்பந்தாட்டச் சங்கம் இளையோருக்கான கூடைப்பந்து சுற்றுப் போட்டியினை நான்காவது தடவையாகவும் இன்று நடத்தியுள்ளது.

குறித்த கூடைப்பந்தாட்ட போட்டிகள் யாழ்.மத்திய கல்லூரியில் இன்று மாலை இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்த போட்டிகளில் 11,13,15,17,20 வயதுப் பிரிவுகளையுடைய 12 பாடசாலை அணிகள் பங்குபற்றியுள்ளன.

இதன்போது பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், சிறப்பு விருந்தினர்களாக போட்டிகளில் பங்குபற்றும் பாடசாலைகளின் அதிபர்களும் கௌரவ விருந்தினராக லவ்வர்ஸ் கோனர் உரிமையாளரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...