Designed by Iniyas LTD
யாழ் வைமன் வீதியில் வீடொன்றின்மீது பெற்றோல்குண்டு தாக்குதல்..
யாழ்ப்பாணம் வைமன் வீதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. ஆரியகுளம் சந்தியில் வாகானம் திருத்தும் உரிமையாளர் ஒருவரின் வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
8 பேர் கொண்ட கும்பல் ஒன்றே இச்செயலை செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது..
சம்பவத்தில் இரு முச்சக்கரவண்டிகள் எரிந்து சேதமாகியுள்ளதுடன், இரு மோட்டார் சைக்கிள்கள் வாளால் வெட்டப்பட்டும், வீட்டின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டும் உள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும் சம்வத்துடன் தொடர்புடையவர்கள் குறித்து தனக்கு எவ்வித தகவல்களும் தெரியவில்லை என வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் கூறப்பட்டுள்ளது.