தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சம் பேருக்கு நிலம் வழங்கப்படும்! மைத்திரி உறுதி

mythiri 554565645இறுதிக் கட்ட போரில் பாதிக்கப்பட்ட ஒரு லட்சம் பேருக்கு நிலம் வழங்கப்படும் என்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி  மைத்ரி பால சிறீசேனா உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் முடிவடைந்து கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிலம் வழங்கப்படும் என்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி  மைத்ரி பால சிறீசேனா தெரிவித்துள்ளார். அனைவருக்கும் நிலம் வழங்க வேண்டும் என்பது எண்ணமாக இருந்தாலும் முதலில் ஒரு லட்சம் பேருக்கு நிலம் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

இது குறித்து அவர் கூறுகையில், ”இது ஒரு லட்சிய இலக்கு. ஆனால் புலம்பெயர்ந்து தங்கியுள்ள அனைத்து மக்களுக்கும் வீடு கட்ட நிலம் ஒதுக்க வேண்டும் என்பதே இறுதி முயற்சி. நிலம் ஒதுக்கீடு செய்யும் பணிகளை 6 மாதத்திற்குள் முடிக்க அனைத்து நடைமுறைகளும் தயாராகி வருகிறது.” என்றார்.

Comments
Loading...