தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யுத்தத்தில் உயிர் நீத்த தமிழ் மக்களை நினைவு கூறலாம் ஆனால் புலிகளை நினைவு கூர்ந்தால் கடும் நடவடிக்கையாம்!

sen copyயுத்­தத்தில் உயிர்­நீத்த தமிழ் மக்­களை முள்­ளி­வாய்க்­காலில் நினை­வு­கூர முடியும். அதற்கு அர­சாங்கம் எந்­தத்­த­டை­க­ளையும் விதிக்­க­வில்லை. ஆனால் எக்­கா­ரணம் கொண்டும் விடு­த­லைப்­பு­லிகளை நினை­வு­கூர முடி­யாது. அதையும் மீறி நினை­வு­கூர்ந் தால் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என ஸ்ரீலங்காவின் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன தெரி­வித்துள்ளார்.

வடக்கின் நிலை­மை­களை ஆராய பொலிஸ், இரா­ணுவம் மற்றும் புல­னாய்வுப் பிரி­வினர் செயற்­பட்டு வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்­டி­ருந்த போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

யுத்தம் முடி­வ­டைந்து ஏழு வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன. அந்த வகையில் மே மாதம் முழு­வதும் இரா­ணுவ வீரர் தினம் அனுஷ்­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது. யுத்­தத்தை வெற்­றி­கொண்ட எமது இரா­ணு­வத்தின் புகழை வெளிப்­ப­டுத்­து­வதை விடவும் இந்த நாட்டில் அமை­தி­யையும், மக்கள் மத்­தியில் நல்­லு­ற­வையும் ஏற்­ப­டுத்த தம்மை தியாகம் செய்த எமது இரா­ணுவ வீரர்­க­ளுக்கு நன்றி தெரி­விக்கும் வகையில் இம்­முறை அர­சாங்கம் முன்­னின்று இரா­ணுவ வீரர்கள் தினத்தை அனுஷ்­டிக்க தயா­ராக உள்­ளது.

மே 18 ஆம் திகதி பாரா­ளு­மன்ற வளா­கத்தில் அமைந்­துள்ள இரா­ணுவ நினை­வுத்­தூ­பியின் முன்னால் இந்த நிகழ்­வுகள் நடை­பெ­ற­வுள்­ளன. மேலும் யுத்­தத்தில் இறந்த இரா­ணுவ வீரர்­களின் குடும்­பத்­தினர், பாதிக்­கப்­பட்­டுள்ள இரா­ணுவ வீரர்கள் அனை­வ­ருக்கும் அரச சலு­கை­களை பெற்­றுத்­தரும் விரு­சறு வேலைத்­திட்­டமும் அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. இரா­ணுவ வீரர்­க­ளுக்­கான இல­வச மருத்­துவ வச­திகள் மற்றும் அவர்­க­ளுக்­கான போக்­கு­வ­ரத்து சலு­கை­க­ளையும் பெற்­றுக்­கொ­டுத்து அவர்­களின் சேவையை மதிக்கும் நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

எமது இரா­ணு­வத்தின் மீதுள்ள அழுத்­தங்கள், சர்­வ­தேச மட்­டத்தில் இருந்து எழுந்­துள்ள அழுத்­தங்கள் அனைத்­திலும் இருந்து அவர்­களை விடு­விக்கும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கவும், அவர்­களின் பொரு­ளா­தார மற்றும் ஏனைய சலு­கை­களை வழங்கும் நட­வ­டிக்­கை­களை பெற்­றுத்­த­ரவும் அர­சாங்கம் தீர்­மா­னித்து வரு­கின்­றது. கடந்த காலங்­களில் இரா­ணு­வத்தை அர­சியல் மய­மாக்கும் நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தது. எனினும் எமது ஆட்­சியில் அவ்­வாறு எந்த நட­வ­டிக்­கையும் முன்­னெ­டுக்­கப்­ப­டாது. இரா­ணு­வத்­தி­ன­ருக்­கான அங்­கீ­கா­ரமும் அவர்­க­ளுக்­கான அந்­தஸ்­தையும் நாம் வழங்­கி­யுள்ளோம். இம்­முறை இரா­ணுவ வெற்றி தினத்தில் நாம் விழா எடுக்­காது அதற்­காக ஒதுக்­கப்­பட்­டுள்ள நிதி­யையும் இரா­ணுவ வீரர்­களின் சேவைக்­கா­கவே ஒதுக்­கி­யுள்ளோம்.

ஒரு புறம் இரா­ணுவ வெற்றி தினம் கோலா­க­ல­மாக கொண்­டா­டப்­படும் அதே வேளையில் மறு­புறம் வடக்கில் உயிர் நீத்த பொது­மக்­களை நினைத்து உற­வுகள் கண்ணீர் வடிக்­கின்­றனர். அவ்­வா­றான நிலையில் அவர்­களின் வெறுப்பை சம்­பா­திக்கும் வகை­யிலோ அல்­லது அவர்­களின் எதிர்ப்பை சம்­பா­திக்கும் வகை­யிலோ நாம் செயற்­ப­டக்­கூ­டாது. நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் வகை­யிலே நாம் செயற்­பட்டு வரு­கின்றோம். வடக்கு தமிழ் மக்­களின் மனங்­களின் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வது தெற்கில் சிங்­கள மக்­க­ளையும் சென்­ற­டைய வேண்டும்.

மேலும் விடு­த­லைப்­புலி பயங்­க­ர­வா­திகள் என்­பது சர்­வ­தேச மட்­டத்தில் தடை­செய்­யப்­பட்ட ஒரு பயங்­க­ர­வாத இயக்­க­மாகும். அவர்­களை இலங்­கையில் அழித்­துள்ளோம். அவ்­வாறு இருக்­கையில் புலி­களை நினை­வு­கூர ஒரு­போதும் இட­ம­ளிக்க முடி­யாது. ஆகவே வழ­மை­போ­லவே 18 ஆம் திகதி வடக்கில் புலி­களை நினை­வு­கூரும் வகை­யிலோ அல்­லது புலிக்­கொடி ஏந்­தியோ, புலி­களின் தலை­வர்­களை நினை­வு­கூரும் வகை­யிலோ ஏதேனும் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டால் அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

எனினும் உயிர் நீத்த தமிழ் மக்­களை தடைகள் இன்றி நினை­வு­கூர முடியும். அதற்கு அர­சாங்கம் தடை­யாக செயற்­ப­டாது. எனினும் புலி­களை நினை­வு­கூரும் செயற்­பா­டுகள் நடை­பெ­று­கின்­றதா என்­பது தொடர்பில் ஆராய இரா­ணுவம், பொலிசார் மற்றும் புல­னாய்­வுப்­பி­ரிவு செயற்­பட்டு வரு­கின்­றது.

இந்த விட­யங்­களை அர­சியல் மய­மாக்கி அதன் மூலம் நாட்டில் இன­வாத கருத்­து­களை பரப்பும் நட­வ­டிக்­கைகள் வடக்­கிலும் நடை­பெ­று­கின்­றன. அதேபோல் தெற்கிலும் நடைபெறுகின்றது. ஆனால் இதனால் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் வரப்போவதில்லை. மேலும் வடக்கில் மாத்திரம் தனி சட்டம் ஒன்று இல்லை. அனைவருக்கும் ஒரே சட்டமே நடைமுறையில் உள்ளது. ஆகவே அதை மீறி செயற்படக்கூடாது.

வடக்கில் யுத்தத்தில் உயிர் நீத்த பொதுமக்களை நினைவுகூர நினைவுத்தூபி அமைக்க முடியும். ஆனால் புலிகளை நினைவுகூரும் வகையில் தூபிகளை அமைக்க முடியாது. அதற்கு அரசாங்கம் எந்த அனுமதியையும் வழங்காது என தெரிவித்துள்ளார்.

Comments
Loading...