தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யுத்தத்தில் கொல்லப்பட்ட அனைவரையும் புலிகளே கொன்றனர் என சாட்சியமளிக்க வைக்க நடவடிக்கை

யுத்தத்தில் கொல்லப்பட்ட அனைவரையும் புலிகளே கொன்றனர் என சாட்சியமளிக்க வைக்க நடவடிக்கை -இராணுவத்தினருடனான யுத்தத்தில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் பெற்றோர் மற்றும் உறவினரை திரட்டி கொல்லப்பட்ட அனைவரையும் விடுதலைப் புலிகளே கொன்றார்கள் என பேட்டி மற்றும் சாட்சியளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.armee valveddi

இந்நடவடிக்கையில் அரசுடன் இணைந்து செயற்படும் சிலா் இயங்குவதாகவும் மக்களுக்கு நிவாரணம் தருவதாகக் கூறியே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப் படுவதாகவும் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை உறுதிப்படுத்திய அங்குள்ளவா்கள் ஆரம்பத்தில் இறந்தவா்களுக்கான பதிவைச் செய்தால் இரண்டரை லட்சம் ரூபா பணம் அரசினால் கிடைக்கும் எனவும், வீடு கட்டித் தரப்படும் எனவும் அங்குள்ள மக்களை அணுகியுள்ள மூவா் (இவா்களுள் ஒருவா் பிரதி அமைச்சா் ஒருவரின் மைத்துனா், ஏனைய இருவரும் இராணுவப் புலனாய்வாளா்கள்) அதற்கான முன்பணமாக உடனடியாக ரூபா ஆயிரம் கொடுத்தும் உள்ளனா்.

அதனை நம்பி மட்டக்களப்பிற்குச் சென்ற மக்களுக்கு அங்கு வைத்து வெறும் காகிதத்தில் கையெத்திட்டுத் தருமாறும் தமது உறவினா்களைப் புலிகளே கொன்றதாகக் கூற வேண்டும் என்றும் அதனையும் எவ்வாறு கூற வேண்டும் என சொல்லிக் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனா்.

எதிர்வரும் ஐந்தாம்திகதி மட்டக்களப்பில் நடைபெறவுள்ள பத்திரிகையாளா் சந்திப்பில் இம் மக்களை முன்கொணர நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருதாகவும் தெரிகின்றது.

Comments
Loading...