தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யுவதியை தற்கொலைக்கு தூண்டியவருக்கு 10 வருட சிறை!

201607300838313189_young-woman-suicide-case-young-man-of-10-years-in-jail_SECVPFஈரோடு மூலப்பாளையம் கரூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகள் பிரியா (வயது 19). இவர் அங்குள்ள ஒரு பழக்கடையில் விற்பனை பிரிவில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த 9-10-2014 அன்று பழக்கடையில் இருந்த ரூ.6 ஆயிரத்தை காணவில்லை.

இந்த நிலையில் அதே கடையில் வேலை செய்த திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை செக்கட்டாம்பட்டி தெற்கு வீதியை சேர்ந்த ராஜா என்கிற அழகர்ராஜா(29) என்ற வாலிபர் பிரியா தான் அந்த பணத்தை திருடியதாக அவர் மீது குற்றம் சுமத்தினார். இதனால் அவமானத்தில் மனம் உடைந்த பிரியா, மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து பிரியாவை தற்கொலைக்கு தூண்டியதாக அழகர்ராஜாவை போலீசார் கைது செய்து அவர் மீது ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு கூறினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட அழகர்ராஜாவுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.100 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Comments
Loading...