தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யுவராஜை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

yuvarajகோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யுவராஜை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறைக்கு நாமக்கல் குற்றவியல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இதற்கு  முன்னதாக நேற்று நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் காலை 11 மணி அளவில் யுவராஜ் சரணடைந்தார். இதற்குப் பிறகு சுமார் 12 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் யுவராஜிடம் விசாரணை நடத்தினர்.

 மேலும் இந்த விசாரணையின் போது புதுத் தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை. இதையடுத்து அவரை ஒருநாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நாமக்கல் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து யுவராஜ் கைது செய்யப்பட்டு நாமக்கல் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

 இன்று நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.

 இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் யுவராஜை 5 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீசுக்கு உத்தரவிட்டது.

Comments
Loading...