தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யோஷித்த ராஜபக்ஷ உட்பட ஐவர் சிறையில் அடைப்பு!

yositha_002

நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித்த ராஜபக்ஷ மற்றும் சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்  ஊடகச் பேச்சாளருமான ரொஹான் வெலிவிட்ட, நிஷாந்த ரணதுங்க உட்பட்ட ஐவரையும் 14 நாட்கள் (எதிர்வரும் பெப்ரவரி 13ஆம் திகதிவரை) விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இவர்கள் அனைவரும் நிதி மோசடிக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு ..

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித்த ராஜபக்ஷ, நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளுக்காக கடற்படை தலைமையகத்துக்கு இன்று காலை 10.30 மணியளவில் அவர் சென்றிருந்தார்.
விசாரணைகளை அடுத்து, நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள யோஷித்த ராஜபக்ஷ, கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதேவேளை முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளரும் CSN நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பதிகாரியுமான ரொஹான் வெலிவிட்ட, அர்ஜுண ரணதுங்கவின் சகோதரர் நிஷாந்த ரணதுங்க, உள்ளிட்ட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, கடுவலை நீதவான் நீதிமன்றத்துக்கு சற்று முன்னர் சென்றுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

Comments
Loading...