தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ரக்ஷ்யா சென்றிருந்த அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு நாடு திரும்பியுள்ளது.

இலங்கையின் அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு ஒன்று ரஷ்யாவில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ளது.

குறித்த குழு இராணுவ தளபாடங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பாக அங்கு கலந்துரையாட  சென்றிருந்தகாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர் விமானங்கள், போர்க்கப்பல் மற்றும் ஏவுகணைகளைக் கொள்வனவு செய்வது குறித்தே இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

குறித்த குழுவில் இலங்கை பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலர் சரத் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இதேவேளை இந்த  கலந்துரையாடலின் இறுதி முடிவுகள் குறித்த தகவல்கள் எவையும் உடனடியாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...