தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ரசாயன முறையில்  பழுக்கவைத்த பழங்களை உண்பதால்…

பழங்களை விரும்பாதவர்கள் என யாருமே இருக்கமுடியாது. விதவிதமான நிறைய பழங்கள் இயற்கை நமக்கு கொடுத்திருகின்றது.

அப்படி இயற்கையாக நமக்கு கிடைத்திருகின்ற இந்த பழங்களை வியாபார நோக்கம் கருதி. ரசாயன முறையில்  பழுக்கவைப்பது இப்போது அதிகரித்திருக்கிறது.

ரசாயன சேர்க்கை

கால்சியம் கார்பைடு, பாஸ்பரஸ், எத்திலீன் போன்ற ரசாயனங்கள் மூலமாகப் பழங்கள் செயற்கையாகப் பழுக்கவைக்கப்படுகின்றன.

இப்படிப் பழுக்க வைப்பதால் அதன் இயல்பு பாதிக்கப்படுகிறது.

மாம்பழம்

மாம்பழம் சாப்பிடுவதே அதிலுள்ள மினரல்ஸ், மல்டி வைட்டமின்களுக்காகத்தான். ஆனால், செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்டவற்றில் இவை எதுவும் இருக்காது.

செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களில் அதன் இனிப்புத்தன்மை அதிகரித்துவிடும்.

அதைச் சாப்பிட்டால் அடிக்கடி வயிற்றுப்போக்கு, வயிறு மந்தம், சருமப் பிரச்னைகள், அல்சர் போன்ற பாதிப்புகள் உண்டாகும்.

கால்சியம் கார்பைட் கலந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் (Carcinogenic) உண்டாவதற்கான வாய்ப்புண்டு. எனவே, வாங்கும்போது கவனமாகப் பார்த்து வாங்க வேண்டும்.

பிரச்சனைகள்

“கால்சியம் கார்பைடால் வயிறு தொடர்பான பிரச்சனைகள், கண் எரிச்சல், சரும அலர்ஜி, வாந்தி போன்றவை உண்டாகலாம்.

சில நேரங்களில் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. இதில், ஆர்சனிக் இருந்தால் புற்றுநோய் உண்டாகவும் வாய்ப்பிருக்கிறது.

மாம்பழம் சாப்பிட்டதால் வயிற்றுப்போக்கு கோடைக்காலங்களில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும்.

அதற்குக் காரணம் இதுபோன்று ரசாயனங்கள்தான். இதனால் உடலில் நீர்வறட்சி ஏற்பட்டு, உடல் வலுவிழக்க வாய்ப்பிருக்கிறது.

அதனால் பழங்களை வாங்கும்போது மிகவும்  கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

Comments
Loading...